
பெண்ணைத் துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை ஊர் முழுக்க வீசப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷ்ரவஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைஃபுதீன். இவரது மனைவி சபினா. இவர்கள் இருவரும் இந்த வார தொடக்கத்தில், லக்னோவுக்குச் சென்றிருந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த 14ஆம் தேதி சபினாவின் சகோதரன் சலாஹுதீன், சபீனாவுக்கு போன் போட்டுள்ளார். சபினாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், சபினா வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும், லக்னோவுக்குச் சென்றிருந்த தகவல் சலாஹுதீனுக்கு கிடைத்துள்ளது.
ஆனால், சலாஹுதீன் அந்தப் பகுதியில் சைஃபுதீனைக் கண்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த சலாஹுதீன், தனது சகோதரி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சைஃபுதீனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சலாஹுதீன் இரண்டு நாட்களாக போலீசாரை தவறாக வழிநடத்திச் சென்றுள்ளார். போலீசாரின் தொடர் விசாரணையில், மனைவி சபினாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
லக்னோவுக்குச் சென்றிருந்த மனைவி சபினாவை கொலை செய்துள்ளார். அதன் பின்னர், சபினாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி 10 கி.மீ அளவிற்கு ஊர் முழுக்க வீசியுள்ளார். அதில், சபினாவின் கையை எரித்து அதை வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சைஃபுதீனும் அவரது பெற்றோரும், சபினாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக சபினாவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து சைஃபுதீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.