Advertisment

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்; பதற வைக்கும் சம்பவம்!

Husband who burnt his wife with petrol;

கேரளா மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன்(50). இவரது மனைவி அனிலா(44). இந்த நிலையில், நேற்று மாலை செம்மன்முக்கு பகுதியில் அனிலா தனது வேறு ஒரு நண்பருடன் காரில் பயணித்துள்ளார். அப்போது, பத்மராஜன் ஆம்னி வேன் மூலம் அனிலாவின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அனிலா பயணித்த வாகனத்தை பத்மராஜன் மோதி உள்ளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், காரில் உள்ளே அனிலாவும், அவரது நண்பர் ஒருவரும் தீக்காயம் அடைந்தனர்.

Advertisment

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில், அனிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அனிலாவுக்கும் பத்மராஜனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அனிலா சமீபத்தில் தனது நண்பரான ஹனீஷுடன் பேக்கரி ஒன்றைத் திறந்தார். இதற்கு பத்மராஜன் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால், இவர்களுக்கு மேலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர் தகராறு காரணமாக தம்பதியர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், ஹனீஷுடன் தனது மனைவி அனிலா காரில் பயணித்துள்ளதாக தவறாக நினைத்த பத்மராஜன், அனிலா பயணித்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பத்ம்ராஜனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe