
தன் மனைவிக்காக கணவர் ஏழ்மை நிலையிலும் கஷ்டப்பட்டு டைட்டானிக் போன்ற வீட்டினை கட்டி வருவதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1912 ஆம் ஆண்டு 1,100 பேருடன் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் நள்ளிரவில் மூழ்கி ஆயிரக்கணக்கான பயணிகள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வினை மையமாக வைத்து 1997 ஆம் ஆண்டு 'டைட்டானிக்' என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது. அதில் இடம்பெற்றிருந்த காதல் கதை அனைவரது நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்த ஒன்று.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மனைவி மீது வைத்திருந்த காதலால் கணவன் அவருக்கு டைட்டானிக் போன்ற வீடு ஒன்றை கட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் நார்த் 24 பார்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹெலன்சாவில் வசிப்பவர் மென்டு ராய். இவர் டைட்டானிக் படத்தை பார்த்த பிறகு தனது மனைவியின் ஆசை நிறைவேற்றுவதற்காக 2010 ஆம் ஆண்டு 435 சதுர அடியில் டைட்டானிக் கப்பல் வடிவில் வீடு ஒன்றை கட்டத் தொடங்கியுள்ளார்.
இதனைக் கட்டும் அளவிற்கு பணம் இல்லாததால் கட்டிட தொழிலாளர்கள் யாரும் இல்லாமல் தங்களே வீடுகட்ட கற்றுக்கொண்டு கட்டியுள்ளனர். தற்பொழுது வரை 15 லட்சம் ரூபாய் இந்த வீட்டிற்காக செலவு செய்துள்ளதாக கூறுகின்றனர். 39 அடி நீளம், 13 அடி அகலம், 30 அடி உயரம் என 3 மாடிகள் கொண்டவாறு இந்த டைட்டானிக் வீடு கட்டப்பட்டுள்ளது. எப்படியேனும் இந்த ஆண்டிற்குள் வீட்டை கட்டிவிட வேண்டும் என முடிவெடுத்துள்ள இந்த தம்பதிகள் மேல்தளத்தில் உணவு விடுதியை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது டைட்டானிக் வீட்டின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)