Skip to main content

மனைவியைக் காணவில்லை; அம்பலமான கொடூர கணவனின் நாடகம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
husband who became a drama after incident his wife

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அஸ்வினி என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அஸ்வினி செல்போனில் பலருடன் பேசி வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் வீடியோகாலில் பேசியும் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது கணவர் ரமேஷுக்கு தெரிய வர அஸ்வினியிடம்  இது குறித்துக் கேட்டுள்ளார். பின்பு இருவருக்கும் சண்டை வந்துள்ளது. நாளாக நாளாக இந்தச் சம்பவம் குறித்து இருவருக்கும் இடையே  அடிக்கடி  சண்டை வந்துள்ளது. இதனால் மன உளைச்சலிலிருந்த அஸ்வினி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்வினியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின் இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்த நிலையில் ரமேஷ் தனது மனைவி அஸ்வினியை காணவில்லை என்று சன்னப்பட்டணா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அஸ்வினியைத் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் ரமேஷின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அஸ்வினி இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சன்னப்பட்டணா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஸ்வினியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவரம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது அதில் ரமேஷ் தனது மனைவியை அடித்துக்கொன்று அவரது உடலை தோட்டத்தில் வீசியது அம்பலமானது. இதையடுத்து பிடிபட்டுவிடுவோமோ என்று ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். தற்போது போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்