husband who beaten his wife

பெங்களூரூ அருகே சிக்கபிதரஹள்ளு பகுதியைச் சேர்ந்தவர் கரஷோத்தம். இவர் மல்லேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கரஷோத்தமிற்கும், ஷில்பா என்ற பெண்ணிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்தத்தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு ஆண் மகன் உள்ளார்.

Advertisment

இந்த நிலையில்தான் கரஷோத்தமிற்கும், அவருடன் பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்து மனைவிஷில்பாவிற்கு தெரியவர இளம்பெண்ணுடனான திருமணத்தை மீறிய உறவை கைவிடவேண்டும் எனக் கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு கரஷோத்தம் மறுப்பு தெரிவிக்க ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் ஷில்பா.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து கரஷோத்தம், ஷில்பா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் கரஷோத்தம், இளம்பெண்ணை தனது வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணும் கரஷோத்தம் ஒன்றாக இருபப்தை ஷில்பா புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த கரஷோத்தம் ஷில்பவை கடுமையாக தாக்கியுள்ளார்; மேலும் நீ உயிரோடு இருந்தால், எங்களால் வாழ முடியாது. நீ தற்கொலை செய்துகொள் என்று கூறி கொடூரமாக தாக்கியுள்ளார்,

இதனைத் தொடர்ந்து ஷில்பாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஷில்பா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கரஷோத்தைதேடி வருகின்றனர்.

Advertisment