பாண்டவர்கள் மட்டும்தான் மனைவியை வைத்துச் சூதாடுவார்களா? ஒடிசா மாநிலம் பாலியாபால் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி தான் பாண்டவர்களுக்கு சளைத்தவரல்ல என தன் மனைவியை வைத்து சூதாடியிருக்கிறார்.
முதலில் தன் நண்பருடன் பணம் வைத்துச் சூதாடிய அந்த கட்டடத் தொழிலாளி, அனைத்துப் பணத்தையும் இழந்த நிலையில் தன் மனைவியை வைத்து சூதாடியிருக்கிறார். சூதில் மனைவியையும் தோற்றதால், தன் மனைவியை சூதாடியவரிடம் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார்.
அவர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இதைக்குறித்து யாரிடமும் சொல்லக்கூடாதென மிரட்டியிருக்கிறார். எனினும் அந்தப் பெண் போலீசில் தன் கணவர் மற்றும் கணவரின் நண்பர் இருவரின் அத்துமீறலையும் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் சூதாடிய தருமனும், சூதில் ஜெயித்த துரியோதனனும் போலீசுக்குப் பயந்து தலைமறைவாகியுள்ளனர்.