Advertisment

ரீல்ஸ் வெளியிட்ட மனைவி; துண்டுதுண்டாக வெட்டி படுகொலை செய்த கணவர்

husband incident wife because release instagram reels

Advertisment

ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரதீப் போலா. இவருக்கு மதுமிதா(24) என்ற பெண்ணுடன் திருமணமாகி இருவரும் 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரதீப் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் தெலுங்கானாவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மனைவி மதுமிதா அதிகம் நேரம் செல்போனில் செலவிட்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அது பிரதீப் போலாவிற்கு பிடிக்கவில்லை. இதனைக் கண்டித்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். ஆனால் இதனை மதுமிதா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போனிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீப் போலா சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியைக் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி தனது வீட்டுக் குளியலறையில் வைத்துள்ளார்.

அதன்பிறகு பிரதீப் போலா தனது குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளார். சில தினங்களாக பிரதீப் வேலைக்கு வராததால், அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆளில்லா வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அவர்கள், உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் குளியலறையில் இருந்து மதுமிதாவின் உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து மதுமிதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பெகும்பேட்டையில் தலைமறைவாக இருந்த பிரதீப் போலாவை கைது செய்தனர். அதன்பிறகு அவரிடன் நடத்தப்பட்ட விசாரணையில் ரீல்ஸ் வெளியிட்டதால் கொலை செய்தேன் என்பதனை ஒப்புக்கொண்டார். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது தெலுங்கானாவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

instagram telangana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe