Husband  incident female police officer over family dispute

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல்நிலையத்தில் திவ்யஸ்ரீ என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராஜேஷ்(38). ராஜேஷ் ஓட்டுநராக இருந்து வருகிறார். திவ்ய ஸ்ரீ - ராஜேஷ் தம்பதியினருக்கு ஆஷிஷ்(12) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜேஷை பிரிந்து திவ்ய ஸ்ரீ தனது தந்தை வாசுவின் வீட்டில் வசித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று மாமனார் வாசுவின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் மனைவி திவ்யஸ்ரீயிடம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குத் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மனைவி திவ்ய ஸ்ரீயை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க வந்த மாமனார் வாசுவையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திலேயே திவ்ய ஸ்ரீ துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாசுவை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திவ்ய ஸ்ரீயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.