மனைவி அழகாக இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த கணவன், அவரது முடியை வெட்டி கொடுமை செய்துள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband cutting his wife's hair

Advertisment

உத்தரப்பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஆரிப். இவருக்கும் ரோஷ்னி என்ற பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரிப்பை விட ரோஷ்னி மிக அழாகக இருப்பாராம். இதன்காரணமாக ஆரிப்பிற்கு தாழ்வு மனப்பான்மை உருவாகி அது நாளடைவில் சந்தேகமாக மாறியுள்ளது.

இந்த சந்தேக நெருப்பு பற்றி ஏறிய தொடங்கியதையடுத்து, தனது மனைவி அழகாக இருக்க கூடாது என்று ஆரிப் நினைத்துள்ளார். அதற்காக ரோஷ்னியின் அழகிய முடியை வெட்டி அவரை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்து கொடுமை செய்துள்ளார்.

பல நாட்கள் கொடுமையை அனுபவித்த ரோஷ்னி, ஆரிப் வேலைக்கு சென்ற போது, வீட்டை விட்டு தப்பித்து காவல்நிலையம் சென்று நடந்ததை கூறி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.