husband celebrated by throwing a party where wife went with her boyfriend

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில், தனது மனைவி ஆண் நண்பருடன் சென்றுவிட்டதை விருந்தளித்து கொண்டாடிய செயல் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

Advertisment

கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தை அடுத்துள்ள வடகரையில் திருமணமான தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது அவரது கணவருக்குத்தெரியவர, மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால் இதனையெல்லாம் மனைவி கண்டுகொள்ளாமல் திருமணத்தை மீறிய உறவைத்தொடர்ந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கணவர் வேலைக்குச்சென்றிருந்த நேரத்தில் ஒரு நாள் மனைவி தனது ஆண் நண்பருடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்த கணவர், ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனைக் கொண்டாட முடிவு செய்த கணவர் தனதுநண்பர்களை வீட்டிற்கு அழைத்து சுமார் 250 பேருக்கு மதுவும், பிரியாணியும் சமைத்து கொடுத்து விருந்தளித்துள்ளார். இது தொடர்பான வீடியோசமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.