மராட்டிய மாநிலம் மேற்கு மும்பையை சேர்ந்தவர் மாருதி செரோத். இவ்ர அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு பல்லவி என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் பள்ளி சென்ற பிறகு வீட்டிற்கு சமைப்பதற்காக ஆட்டுக்கறி எடுத்துவந்துள்ளார் மாருதி செரோத். மனைவியிடம் கறியை கொடுத்துவிட்டு மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
சிலமணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவர் மனைவிடம் சாப்பாடு போடச் சொல்லியுள்ளார். பல்லவி அவருக்கு சாப்பாடும் போடும் போது, கறி வைப்பதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் கோபமான அவர், மனைவியை தாக்கி அவரது உடலுக்கு தீவைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பல்லவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Follow Us