Advertisment

கணவன் கொடுத்த சித்ரவதை...மனைவி எடுத்த முடிவால் அதிர்ச்சி!

குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஜு மற்றும் சீதா ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ருத்ரா என்ற மகனும், 4 வயதில் சால் என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை போட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைக்கு காரணமாக ராஜுவின் பெற்றோரும் அவரது உறவினர்களும் காரணமாக இருந்துள்ளனர்.

Advertisment

family issues

மேலும் சீதாவை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சீதா கணவனிடம் கோபித்து கொண்டு தனது தயார் வீட்டுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அவரது பெற்றோர் சீதாவிடம் நடந்ததை கேட்டுள்ளனர். பின்பு சீதாவின் பெற்றோர் சிறிய வேலை காரணமாக வெளியே சென்றுள்ளனர். வீட்டில் சீதாவும், இரண்டு குழந்தைகளும் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து அறையில் தன் இரண்டு மகன்களையும் தூக்கு மாட்டிக் கொலை செய்துவிட்டு அதன் பிறகு தானும் தற்கொலை செய்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த சீதா குடும்பத்தினருக்கு மூவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். இறப்பதற்கு முன்பு சீதா எழுதிய கடிதம் இருந்துள்ளது. அதில் தங்கள் சாவுக்கு தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கடிதம் எழுதியுள்ளார். இதை வைத்து சீதாவின் அண்ணன் போலிஸில் புகார் அளிக்க போலிஸார் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Advertisment
family problem husband incident parents wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe