Advertisment

"இந்தியாவில் ஆபத்தான நிலையில் பட்டினியின் அளவு" - உலக பட்டினி குறியீட்டு அறிக்கை அளிக்கும் அதிர்ச்சி !

global hunger index

அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஆண்டுதோறும் உலக பட்டினி குறியீட்டுபட்டியலைவெளியிட்டுவருகின்றன.

Advertisment

ஊட்டச்சத்து குறைபாடு,5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள்ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டினி குறியீடு தயாரிக்கப்படுகிறது.

Advertisment

இந்தநிலையில், இந்த ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டுபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 116 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 101வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 107 நாடுகள் இடம்பெற்றிருந்தபோது இந்தியா 94வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் பட்டினி குறியீட்டு பட்டியலில், அண்டை நாடுகளானபாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. பாகிஸ்தான் 92வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் 76வது இடத்திலும் அந்தப் பட்டியலில் உள்ளன.

alt="udanpirape " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f00f1fe3-8941-4cb0-a098-0eb224caef29" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_77.jpg" />

இந்தியாவில் பட்டினி அளவு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இந்தியாவில் கரோனாமற்றும் அதுதொடர்பானகட்டுப்பாடுகளால்மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தப் பட்டினி குறியீடு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே இந்தியாவில்தான்5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் அதிகம் பேர் உயரத்திற்கு குறைவான எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும்அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

global hunger index India Nutrition
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe