/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (65)_0.jpg)
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் தேர்தல் குறித்து ஜீநியூஸ் ஊடகம் கருத்துக்கணிப்பு நடத்தி அதன்முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஜீநியூஸ் ஊடக கருத்துக்கணிப்பின்படி,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும்போட்டிநிலவும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 35-38 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 36-39 இடங்களையும் வெல்லும் எனவும்,சிரோமணி அகாலி தளம் 32-35 இடங்களை வெல்லும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக 4 முதல் 7 இடங்களை வெல்லும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடைபெற்றதாக ஜீநியூஸ் ஊடகம் கூறியுள்ளது.
Follow Us