Advertisment

அடுத்தடுத்து அரங்கேறும் நரபலிகள்; கடவுளின் தேசத்தில் தொடரும் பயங்கரம்

Human sacrifices continue Kerala

Advertisment

அடுத்தடுத்து பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், மேலும் ஒரு பரபரப்பு சம்பவம், கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளப்புழா பகுதியில் வாசந்தி அம்மா என்ற மடம் உள்ளது. இந்த மடத்தில் தேவகி என்ற பெண் வசித்து வருகிறார். 52 வயதான இவர், மாந்திரீகம் செய்யும் சாமியார் என்று கூறப்படுகிறது. இவர், இந்த மடத்தில் பல ஆண்டுகளாக மாந்திரீகம் செய்வதற்கு சிறுவர்களை பயன்படுத்தியுள்ளார். காவல் நிலையத்தில், தேவகி குறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதியன்று, தேவகி வீட்டில் இரண்டு சிறுவர்கள் செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது, நீண்ட நேரமாகியும் வாசந்தி மடத்துக்கு சென்ற சிறுவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனையடுத்து, அந்த அறையின் கதவை திறந்து பார்த்தபோது, சிறுவர்களை மாந்திரீகம் செய்வதற்காக தேவகி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மந்திரவாதத்தில் ஈடுபடும் போது, பலத்த குரல் எழுப்பும் தேவகி, நாக்கை கடித்து, எதிரே அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் பயமுறுத்தி மயக்கம் அடையச் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேவகியின் வீட்டை அடித்து உடைத்துள்ளனர். அதன் பிறகு, தேவகியை முற்றுகையிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தேவகியை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kerala police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe