
கேரள மாநிலம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சபிதா. இவர் அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் 3 மாத கர்ப்பிணி ஆவார். மூன்று குழந்தைகளுக்குத் தாயானஇவர், அதிகாலை 4 மணியளவில், காவல்துறையினரை, தொலைப்பேசியில்அழைத்து, தனது6 வயது மகனை கடவுளுக்குப் பலிகொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரது வீட்டிற்குவிரைந்துள்ளனர். அங்கு சபிதா, வீட்டு வாசலிலேயே இரத்தம் படிந்தகைகளோடு காவல்துறையினருக்காகக் காத்திருந்துள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தகாவல்துறையினர், வீட்டிற்குள்ளே சென்றுபார்த்தபோதுஅங்கு ஆறு வயது சிறுவன்கழுத்தறுக்கப்பட்ட நிலையில்கிடந்துள்ளான்.
இதனையடுத்து காவல்துறையினர் சபிதாவைகைதுசெய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திராவில் நன்றாகப் படித்தபெற்றோரே தனதுஇரு மகள்களையும் நரபலி கொடுத்தசம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள், கேரளாவில் ஆசிரியர் ஒருவர் மகனைப் பலி கொடுத்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)