கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை அடுத்து அங்கு இரண்டாம் கட்டநிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மழை அதிகரித்ததால் அதிக நீர்திறக்கப்பட்டு மாட்டுப்பட்டி ஆற்றில் வெள்ளநீர் பாய்ந்தது. அதனைஅடுத்து மழைப்பொழிவுகுறைந்ததால்நீர் வரத்தும் குறைந்து மாட்டுப்பட்டி ஆற்றில் நீர் குறைந்தது.
தற்போது நீர் வரத்து மிகவும் குறைந்ததால்மாட்டுப்பட்டிஆற்றில்உள்ள பாறைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. அந்த பாறைகளில் ஒரு பாறை மட்டும் திடீரெனமனிதனின் கை விரல்கள் போன்ற வடிவத்தில் இருப்பதுவியப்பை ஏற்படுத்தி உள்ளது.வெள்ளத்தில் ஏற்பட்ட உராய்வுகள் மற்றும் தேய்மானத்தால் இப்படி ஆகியிருக்கலாம் என கூறப்பட்டாலும் அந்த பாறையை அதிசயமாகமே பார்த்து வருகின்றனர் அப்பகுதி வாசிகளும்அந்த பகுதியை கடந்து செல்லுபவர்களும்.