hul to rebrand fair and lovely without fair

‘ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற சொல்லை நீக்கிவிட்டு மறுபெயரிடுதல் செய்யப்போவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

Black Lives Matter இயக்கம் மூலமாக, உலகம் முழுவதும் நிறவெறி மற்றும் நிறத்தின் அடிப்படையில் ஒருவரது அழகினை அளவிடுதல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். அமெரிக்காவில் ஏற்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு பிறகு, நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் உலகின் பல பகுதிகளில் வெடித்துள்ளன. இதில் பெருமளவு மக்கள், அழகுசாதன நிறுவனங்களின் நிறம் குறித்த தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதனையடுத்து பல அழகுசாதன நிறுவனங்களும் தங்களது சந்தைப்படுத்தும் முறைகளை மாற்றி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான 'ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற சொல்லை நீக்கப்போவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

கருப்பாக உள்ளவர்கள் வெள்ளையாக அழகாக மாறுவதற்கு இந்த க்ரீமை பயன்படுத்தலாம் என விளம்பரப்படுத்தப்படும் இவ்வவகை பொருட்கள், கருப்பு என்பதனை அழகில்லாத நிறமாக மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது நிறவெறி எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு 'ஃபேர் அண்ட் லவ்லி' க்ரீம் பெயரில் இருந்து 'ஃபேர்' என்ற வார்த்தையை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பின்படி, அதன் தயாரிப்புகளில் இனி ‘fairness’, ‘whitening’ & ‘lightening’ போன்ற சொற்கள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.