Advertisment

எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

Howara CSMT Express train incident at Chakradharpur division

ஹவுராவில் இருந்து மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12810) ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று (30.07.2024) அதிகாலை 03.45 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இருந்து 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் சிக்கி 6 பயணிகள் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து சம்பவம் ரயில் பயணிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உதவிக்கு இந்திய ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, டாடாநகர் : 06572290324, சக்ரதர்பூர்: 06587 238072, ரூர்கேலா: 06612501072, 06612500244, ஹவுரா: 9433357920, 03326382217, ராஞ்சி: 0651-27-87115, மும்பை: 022-22694040 மற்றும் நாக்பூர்: 7757912790 ஆகும்.

Advertisment

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சக்ரதர்பூர் ரயில்வே பிரிவு மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவிக்கையில், “ஹவுரா-மும்பை ரயில் சக்ரதர்பூரில் தடம் புரண்டது இந்த விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்தனர், அவர்களில் ஐந்து பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. எனவே அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பயணி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பயணிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு சக்ரதர்பூர் நிலையத்தில் இருந்து கூடுதல் ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Jharkhand Mumbai howrah Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe