Advertisment

மக்களுக்கு எவ்வாறு உதவுகிறீர்கள்? - இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவரிடம் டெல்லி போலீஸார் விசாரணை!

iyc president srinivas

Advertisment

இந்தியாவில் கரோனாதீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்துகள், ஆக்சிஜன் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியிலும்கரோனாமோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டெல்லி ஆக்சிஜன் தட்டுப்பாட்டிலிருந்துபெருமளவிற்கு மீண்டிருந்தாலும், சிலநாட்கள் முன்பு வரை அங்கும் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது.

அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர், தங்கள் அணியின் தேசிய தலைவர்சீனிவாஸ் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்தனர். ஒருகட்டத்தில்டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதரகமே சீனிவாஸிடம் ஆக்சிஜன் அளிக்குமாறு உதவி கேட்டது.

இந்தநிலையில்இன்று, இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் சீனிவாஸிடம், மக்களுக்கு எவ்வாறு உதவுகிறீர்கள் என கேட்டு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்தான்இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும் டெல்லி போலீஸார்விளக்கமளித்துள்ளனர். "கரோனாமருந்துகளை அரசியல்வாதிகள், சட்டவிரோதமாக விநியோகிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனைவிசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர். அதனடிப்படையில், பலரிடம் விசாரணை நடைபெறுகிறது" என டெல்லி போலீஸாரின்செய்தித்தொடர்பாளர்ஏற்கனவே கூறியிருந்தார்.

Advertisment

இந்த விசாரணை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளராகுல்காந்தி, கொலை செய்பவனை விட, காப்பாற்றுபவன் எப்போதும் சிறந்தவன் என கூறியுள்ளார்.

congress corona virus delhi police
இதையும் படியுங்கள்
Subscribe