தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம்பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து வெளுத்துக்கட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நால்கொண்டாவில்இளைஞர் ஒருவன் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஒரு கட்டத்திற்கு மேல்பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் இதுகுறித்து அவரதுகணவரிடம் கூற அந்த பெண்ணின் கணவர் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார்.

 How many days is tolerate...women beat the men for trying illegal relationship How many days is tolerate...women beat the men for trying illegal relationship

Advertisment

இந்நிலையில் அஜாலாவாவி காலனியில் மீண்டும் அந்த பெண்ணிடம் அந்த நபர் தவறாக நடந்து கொள்ள முயன்றதைகண்ட அந்தப் பெண்ணின் கணவர் அவனைப் பிடித்து வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் கயிறினால் கட்டிப்போட்டார். கட்டி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஷூவையும், ஒரு குச்சியை அவரது மனைவியிடம் கொடுத்து சரமாரியாக அந்தஇளைஞனைஅடிக்கவைத்துஅதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் சம்பந்தப்பட்ட இளைஞன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டுசரமாரியாக அந்த பெண்ணால் தாக்கப்படுகிறான்.

Advertisment

 How many days is tolerate...women beat the men for trying illegal relationship

காவல்துறையினர் வரும்வரை அடித்து வெளுத்துக்கட்டியபிறகு அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அண்மையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில்இதேபோல் பெண் ஒருவர், தன்னிடம் பாலியல் அத்துமீறலுக்குமுயன்ற இளைஞரை எச்சரித்த படியே அடித்த வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த காட்சிகளும்இணையத்தில் வைரலாகி வருகிறது.