dead

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (எ) கோதண்டபாணி (35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு பாபு அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, குயிலாப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பாபுவை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

Advertisment

இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனால் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழிந்தார். பாபு கொல்லப்பட்டதை அறிந்த அவருடைய உறவினர்கள் பாபுவின் உடலை எடுக்கவிடாமல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து, பாபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதணைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் ஆரோவில் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதேபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுவின் தம்பி வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.