/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wardenn.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் கே.பி ஆண்கள் விடுதி வார்டன் டி.கே.சவுகான் என்பவர், இரவு நேரத்தில் மாணவர்களை குச்சியால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வார்டன் டி.கே.சவுகான், நான்கு மாணவர்களை குச்சியால் அடிப்பதையும், அவர்களது கண்ணத்தில் அறைவதையும் காணலாம்.
தரையில் தண்ணீர் சிந்தியதாகவும், மாணவர்கள் இரவு வரை அறைகளை பகிர்ந்து கொண்டதாலும் வார்டன் மாணவர்களை அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து வார்டன் டி.கே.சவுகானை உடனடியாக நீக்கக் கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டி.கே.சவுகான் மாணவர்களை அடிப்பது இது முதல் முறை அல்ல, பல சந்தர்ப்பங்களில் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உடல் ரீதியாக தாக்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)