மத்தியபிரதேசத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த தாயை கொண்டுசெல்ல அமரர் ஊர்தி தர மருத்துவ நிர்வாகம் மறுத்ததால் இறந்ததாயின் உடலை இருசக்கர வாகனத்திலேயே இளைஞர் எடுத்து சென்றபரிதாபம் நடந்துள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் மோகன்வாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்உயிரிழந்துள்ளார். தனதுதாயின் உடலை எடுத்து செல்ல அவரது மகன் மருத்துவமனை ஊழியர்களிடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் கைவிரித்ததாலும் கையில் பணமில்லாததாலும் தான் கொண்டுவந்த இருசக்கர வாகனத்திலேயேஇறந்ததாயின் உடலை அமர வைத்து எடுத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையின் இந்த மனிதாபிமானமற்ற செயலை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்துவிசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இளைஞர்தனது தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் வீடியோ தற்போதுஇணையத்தில்வைரலாகி வருகிறது.