/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3717.jpg)
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்தும், மருத்துவமனை கட்டிடத்தின் மேல் ஏறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரத் துறை இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் ஏறி நின்றுபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)