

style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பீஹாரில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 வயது சிறுவனுக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் இறந்த மகனை தந்தைதோள்மீது தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.
பீஹார் மாநிலம் நலந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்து வராததால் இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுமருத்துவமனையில் சேர்ப்பப்ட்டான். ஆனால் இறுதியில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயேஇறந்துபோக அவரது தந்தை உடலை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுக்க தந்தையே பெற்ற மகனை தோளின்மேல் தூக்கி சென்ற காட்சி அங்குள்ளவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவரில் ஒருவர் அவர்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச்சென்று அவரது வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)