Horrible explosion in firecracker factory; video goes viral

மைசூரில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம் மைசூர் நகரில் உள்ள தொழிற்பூங்காவில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

தற்பொழுது வரை இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்ட சத்தத்தால் அந்த பகுதியே அச்சத்தில் உறைந்துள்ளது. மேலும் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளதுஅந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.