மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கும் ஹோண்டா நிறுவனம்!

Honda to launch electric vehicle

இந்தியாவில் ஹீரோ, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து ஹோண்டா நிறுவனமும் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகன தயாரிப்பில் களமிறங்கவுள்ளது. வரும் 2022- 2023 ஆம் நிதியாண்டில் தங்களின் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹோண்டா மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பில் நுழைவது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோலின் விலை உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலானோர் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்திற்கு மாறியுள்ளனர். மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியங்களை அளித்து வருகின்றன.

இதனால், மின்சார வாகனங்களின் பயன்பாடு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

electric scooter honda India
இதையும் படியுங்கள்
Subscribe