lesbian

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்திய தண்டனைசட்டத்தின் கீழ் இயற்கைக்கு மாறாக உடலுறவு (ஓரின சேர்க்கை) கொண்டால் தவறு என சட்டப்பிரிவு 377 கூறுகிறது. ஓரின சேர்க்கை குற்றத்திற்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனையும் அபராதம்விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை கடந்த ஜூலை மாதம் முடித்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருக்கிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வழக்கில் ஓரினசேர்க்கை தவறல்ல என தீர்ப்பளித்து ஓரினசேர்க்கை குற்றம் என வலியுறுத்தும்377 சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில் இந்த தீர்ப்புசென்னை, மும்பையில் ஓரினசேர்க்கையை ஆதரிப்பவர்கள் மத்தியில்பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment