Advertisment

பார்வையற்ற பெண்ணுக்காக பாடிய மாணவிக்கு குவியும் பாராட்டு; இன்ப அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்

bb

கேரளாவில் பார்வையற்ற பெண்ணுக்காக பாடல் பாடிய பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்குவிந்து வருகிறது.

Advertisment

அண்மையில் கேரளாவில் சாலையோரம் பார்வையற்ற இஸ்லாமிய பெண் ஒருவர் இஸ்லாமிய இறை பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அப்பெண்ணால் பாடலை தொடர்ந்து பாட முடியாத நிலை ஏற்பட்டது. அப்பொழுது அங்கு சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியான ஆதிரா என்பவர் மைக்கை வாங்கி அந்த பாடலை தொடர்ந்து அவர் குரலில் பாடினார்.

Advertisment

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக இஸ்லாமிய பெண்ணுக்கு பாடிய இந்து மாணவி என நெட்டிசன்களால் அதிகமாக பரப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து மாணவி ஆதிராவுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தன. இந்த நிலையில் பார்வையற்ற பெண்ணுக்காக பாடி உதவி புரிந்த ஆதிராவுக்கு வீடு கட்டி தர கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பஷீர் என்பவர் முன்வந்துள்ளார். இதற்கான உறுதியை மாணவியிடம்அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

student Business humanity Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe