தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாகஇ-பாஸ்நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டநிலையில், மத்திய அரசுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலங்களுக்கு இடையே சரக்குப் போக்குவரத்து மற்றும்தனிநபர் செல்ல தடை விதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இ-பாஸ்போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மாநில தலைமைச் செயலாளர்களுக்குஉள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.உள்துறையின்வழிகாட்டுதலைமீறும்வகையில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார் எனமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கிடையேயானசரக்குப் போக்குவரத்து மற்றும்தனிநபர் பயணிப்பதுகுறித்து முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார். மேலும்,கரோனாவைகட்டுப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.