Advertisment

8 தமிழ்நாடு காவல்துறையினர் உட்பட 152 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிப்பு!

mha

Advertisment

புலனாய்வில் சிறப்பாக செயல்படும் காவல் அதிகாரிகளுக்குச்சிறந்த புலனாய்விற்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த புலனாய்விற்கான மத்திய உள்துறை அமைச்சரின்பதக்கத்திற்கு 152 காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐயைச் சேர்ந்த 15 பேரும், மஹாராஷ்ட்ராமற்றும் மத்திய பிரதேஷ் காவல்துறையில் தலா 11 பேரும், உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த 10 பேரும், கேரளா மற்றும் ராஜஸ்தான் காவல்துறையைச் சேர்ந்த 9 பேரும், தமிழ்நாடுகாவல்துறையைச் சேர்ந்த 8 பேரும், பீகாரைச் சேர்ந்த ஏழு பேரும்,குஜராத், கர்நாடகா, டெல்லி காவல்துறைகளில்தலா 6 பேரும் இந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 பெண் காவல் அதிகாரிகளும்அடங்குவர்.

ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோர் தமிழ்நாடு காவல்துறையிலிருந்துஇந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

medals MINISTRY OF HOME AFFAIRS police
இதையும் படியுங்கள்
Subscribe