Advertisment

தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு! - உபி உள்துறை அமைச்சகம் அதிரடி

அரசியல் தலைவர்கள், இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் உள்ளிட்டோர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உத்தரப்பிரதேசம் மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ambetkar

திரிபுரா மாநிலத்தில் சோவியத் புரட்சியாளர் லெனின் சிலைகள் சில வாரங்களுக்கு முன்னர் தகர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நாடு முழுவதும் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், ஷியாம பிரசாத் முகர்ஜீ என பல தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம் மாநிலம் கேரியா கிராமத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்தது. அதே கிராமத்தில், கடந்த சனிக்கிழமை மற்றுமொரு அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில உள்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், உபி மாநில டிஜிபி ஓ.பி.சிங் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ambetkar uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe