Advertisment

'அவரின் பணிகள் சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றியது'- பிரதமர் மோடி மரியாதை

'His works are deeply rooted in social development' - Modi honors Muthuramalinga Devar

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் பிரதமர் மோடி சமூக வலைத்தளப்பக்கத்தின் வாயிலாக முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், 'மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும்பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்' என தெரிவித்துள்ளார்.

Advertisment

pasumpon modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe