vishwa deenadayalan

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Advertisment

83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் செல்லும் வழியில் இந்த சாலை விபத்தானது நடந்தது. விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி மோதி இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் விஸ்வா தீனதயாளன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஸ்வா தீனதயாளன் உடல் விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்த நிலையில், விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி" எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.