ADVERTISEMENT

ஆதரவற்ற இந்து பெண்ணின் இறுதிச்சடங்கை நடத்திய இஸ்லாமியர்கள்!

12:57 PM Jun 18, 2018 | Anonymous (not verified)

ஆதரவற்ற நிலையில் இறந்துபோன இந்து பெண்ணின் இறுதிச்சடங்கை நடத்த இஸ்லாமியர்கள் முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு அருகில் உள்ளது புத்தூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த பவானி(வயது 52) என்ற பெண், நேற்றுமுன்தினம் இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். திருமணமாகாத பவானி தனது சகோதரர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பவானியின் திடீர் மரணத்தை அடுத்து கிருஷ்ணா, ஆதரவற்ற தங்களுக்கு இறுதிச்சடங்கு நடத்த உதவ முன்வருமாறு அக்கம்பக்கத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ADVERTISEMENT

ஆனால், யாரும் இதற்காக முன்வராத நிலையில், பவானியின் உடல் நேற்று மதியம் வரை கிருஷ்ணாவின் வீட்டில் ஆதரவற்று கிடந்தது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சவுகத், ஹம்சா, நசீர், ரியாஸ் மற்றும் ஃபரூக் ஆகியோர் கிருஷ்ணாவின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக நிதி திரட்டி பவானியின் இறுதிச்சடங்கை நடத்த முன்வந்தனர். அங்கன்வாடி ஊழியரான ராஜேஸ்வரி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த சஃபியா, ஜூபைதா ஆகியோர் பவானியின் உடலை சுத்தம்செய்ய, இஸ்லாமிய இளைஞர்கள் அவரது உடலை புத்தூர் சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று இறுதிச்சடங்கை நடத்தினர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர். நாங்கள் இதை பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம் கடந்து நாங்கள் உதவுவதற்காக முன்வந்தோம். இறந்தவர் யாராக இருந்தாலும் அவரது இறுதிச்சடங்கு முழுமையாக நடக்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT