Advertisment

சிவராத்திரியின் போது பரிமாறப்பட்ட அசைவ உணவு; மாணவர்களைத் தாக்கிய இந்து அமைப்பினர்!

Hindu organizations hit students for non-vegetarian food served during Shivaratri in delhi

நாடு முழுவதும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி, பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறியதால் மாணவர்களை, இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தலைநகர் டெல்லியில், தெற்காசிய பல்கலைக்கழகம் (SAU) ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், நேற்று (26-02-25) மகா சிவராத்திரி அன்று மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்து அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற அமைப்பினர், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisment

அந்த தகவலின் பேரில் பல்கலைக்கழககத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து, பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டுவதாக இந்திய மாணவர் சங்கமும், அகில பாரதிய வித்யார்த்திய பரிஷத் அமைப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்திய மாணவர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற ஏபிவிபியின் கொடூரமான மற்றும் ஜனநாயக விரோத கோரிக்கையை ஏற்காததால், தெற்காசிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏபிவிபியினர் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். உணவகத்தில் இருந்த மாணவர்களை ஏபிவிபியினர் தாக்குவதும், தாக்குவதும் வீடியோவில் காணப்பட்டது. தாக்குதலின் போது, ​ மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அசைவ உணவு பரிமாறியதற்காக உணவக ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கூறியதாவது, ‘தெற்காசிய பல்கலைக்கழகத்தில் மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி ஏராளமான மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை மதித்து, இந்த சிறப்பு நாளில் தங்களுக்கு அசைவ உணவை ஏற்பாடு செய்யுமாறு இந்த மாணவர்கள் முன்பு உணவக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மாணவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழக நிர்வாகம் இரண்டு வெவ்வேறு உணவகங்களில் ஒன்றில் அசைவ உணவை ஏற்பாடு செய்தது. உண்ணாவிரத மாணவர்களுக்காக நியமிக்கப்பட்ட உணவகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டபோது, இந்திய மாணவர் சங்கத்துடன் தொடர்புடையவர்கள் அங்கு வலுக்கட்டாயமாக அசைவ உணவை பரிமாற முயன்றனர்’ என்று தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivarathiri University Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe