Advertisment

பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்து மகாசபை தலைவர்...

உத்தரபிரதேசத்தில் இந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

hindu mahasabha leader passed away

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் இருந்த தலைவர் கமலேஷ் திவாரி மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கமலேஷ் திவாரியை சுற்றிவளைத்த மர்ம நபர்கள் அவர்மீது துப்பாக்கியால் சுட்டதோடு, சரமாரி தாக்குதலும் நடத்தியுள்ளனர். அவரைசுட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பித்ததாக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படுகாயம் அடைந்த கமலேஷ் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் இந்து மகா சபை தலைவர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

uttarpradesh Hindu Maha sabha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe