Advertisment

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்... நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கேரள தம்பதி...!

கேரளாவில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகள் மசூதியில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

hindu couples wedding in kerala-mosque

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பிந்து என்பவர் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, தனது மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் தவித்துள்ளார். பின்னர் அஞ்சு என்ற தனது மகளின் திருமணத்தை நடத்த உதவி செய்யுமாறு செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடியுள்ளார்.

அந்த தாயின் நிலையை கண்டு, நிதி உதவி செய்ய சம்மத்தித்ததோடு, மசூதியிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளவும் மசூதி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கும் செருவல்லி மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக தென்னைக் குலைகளுடன் வாழை மரங்கள் நடப்பட்டு மசூதியில் பந்தல் போடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தப்பட்டது. மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

marriage Kerala muslims Hindu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe