Skip to main content

அனைத்து இடங்களிலும் இந்தி.. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அமித்ஷாவின் 112 பரிந்துரைகள்

Published on 10/10/2022 | Edited on 14/10/2022

 

Hindi Everywhere.. Amit Shah's 112 Recommendations that caused a stir across the country

 

ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

 

1976ம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு முதல் முறையாக அலுவல் பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.  மக்களவை உறுப்பினர்கள் 20 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என 30 பேர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். 

 

தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இக்குழு அதன் 11ஆவது அறிக்கையை சமர்ப்பித்தது. 112 பரிந்துரைகளை அந்த அறிக்கை கொண்டிருந்தது.

 

அந்த பரிந்துரைகளாவன:

ஐஐடி, ஐஐஎம் எய்ம்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா நவோதயா வித்யாலயா மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட இதர மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

 

தவிர்க்க முடியாத இடத்தில் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிக்கலாம். அங்கும் படிப்படியாக ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி வழியில் கற்பித்தால் மட்டுமே இந்தியை பொது மொழியாக மாற்றமுடியும்.

 

பணியாளர்கள் தேர்வுக்கான வினாத்தாளில் ஆங்கிலம் கட்டாயம் என்ற முறையை நீக்க வேண்டும். ஆங்கிலத்திற்கு பதில் இந்தியில் கேள்வித்தாளை தயாரிக்க வேண்டும். அரசுப்பணிகளில் சேர இந்தி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். இந்தியை பயன்படுத்தாத அரசு அதிகாரிகளை எச்சரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற விசாரணைகள் மற்றும் உத்தரவுகள் இந்தி மொழியில் இருக்க வேண்டும். 

 

ஐநா அமைப்பில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை மாற்ற வேண்டும். அரசு நிகழ்ச்சிக்காக அச்சிடப்படும் அழைப்பு மற்றும் உரைகள் இந்தியில் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாக்கப்படாமல் அதனை பொதுமொழியாக்க முடியாது.

 

அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்த பரிந்துரைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினையும் கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது..” - அமைச்சர் அமித்ஷா 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

“Hindi unites the diversity of languages..” - Minister Amit Shah

 

இன்று செப். 14ம் தேதி இந்தி தினம் எனப்படும் இந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தை முன்னிட்டு ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, “இந்தி திவாஸ் தினத்திற்கு எனது வாழ்த்துகள். இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்துவருகிறது. இது இந்திய விடுதலை போராட்டத்தின் போது மக்களை ஒருங்கிணைத்தது. 

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி எப்போதும் எந்த மொழியுடனும் போட்டியிட்டதில்லை. போட்டியும் போடாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தியே ஒரு நாடு வலுவாகும். இந்தி பல்வேறு இந்திய மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளுக்கு மதிப்பளித்து, அவற்றின் சொற்களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஏற்றுக்கொண்டது.

 

விடுதலைப் போராட்டத்தின் போதும், விடுதலைக்குப் பிறகும் இந்தியின் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு சட்டத்தை வடிவமைத்தவர்கள் செப். 14, 1949 அன்று இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டனர். ஒரு நாட்டின் அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு அதன் சொந்த மொழி மூலம் மட்டுமே சாத்தியமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மன்றங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளன. 

 

அலுவல் பணிகளுக்கு இந்தியை உபயோகப்படுத்த வேண்டும். நாட்டின் அலுவல் மொழியில் செய்யப்படும் பணிகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பணிகளில் இந்தி மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கையை தயாரித்து குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது..” - ராமதாஸ் 

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

“Hindi imposition efforts will never win..” - Ramadoss

 

இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை; மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது. இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது.

 

இந்தியை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் ஏங்கவில்லை; அவை எப்போதும் எதிர்ப்பு நிலையில்தான் உள்ளன. அத்தகைய சூழலில் அனைவரும் இந்தியை எதிர்ப்பின்றி ஏற்கும் நிலை வரும் என்றால், அத்தகைய நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது என்றுதான் பொருள். கடந்த காலங்களில் அத்தகைய முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும்  வீழ்த்தப்படும். இது உறுதி.

 

எந்த மொழியுடனும் இந்தி போட்டி போடவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது உண்மையென்றால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளுக்கு உரிய தகுதியை வழங்க மத்திய அரசு மறுப்பது ஏன்? மாநில மொழிகள் மத்திய அலுவல் மொழிகளாக்கப்பட்டால் இந்தி  வீழ்ந்து விடும் என்ற அச்சத்தால் தானே?

 

இந்தி மொழியின் செழுமை மீதும், வலிமை மீதும்  நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும்  மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக மத்திய அரசு அறிவிக்கட்டும். அவற்றில் எந்த மொழி சிறந்த மொழியோ, எது  இலக்கிய வளம் மிக்க மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ, அது மக்கள் மனங்களை ஆளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.