Advertisment

தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக எம்.பி சடலமாக மீட்பு

bjp mp

ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா. இவர் இன்று (17.03.2021) காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தனது தொலைபேசி அழைப்பை எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது தனிப்பட்ட உதவியாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து எம்.பி.யின் வீட்டிற்கு விரைந்த போலீஸார், அவரது அறைக்கதவை உடைந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு அவர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

Advertisment

எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மாவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். எம்.பியின் மரணத்தை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi member Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe