யமுனை ஆற்றலிருந்து தங்களது பங்கு நீரின் ஒரு பகுதியை விற்பனை செய்ய இமாச்சல பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தின் தாஜேவாலா வழித்தடத்தில் பயணிக்கும் யமுனை ஆற்றின் நீரை விற்பனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இமாச்சல பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இமாச்சல பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நீரானது யாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ .21 கோடி வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாண்ட், டெல்லி, உத்தரபிரதேசம் அஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் யமுனை நதியின் நீரை விற்பனை செய்வதற்குமுதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான கூட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.