Advertisment

ஹிஜாப் விவகாரம்... உச்சநீதிமன்றத்தை நாடும் 6 மாணவிகள்!

 Hijab affair ... 6 students seeking Supreme Court!

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.

Advertisment

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும் விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

Advertisment

இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி மற்றும் கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தின்படி அத்தியாவசியமானது அல்ல எனத் தெரிவித்தனர். மேலும், ஹிஜாப் அணிய கல்வி நிறுவனங்கள் விதித்த தடை செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த மாணவிகளில் 6 பேர் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

supremecourt highcourt karnataka Hijab
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe