நாட்டில் நிலவும் அதிக வெப்பம், பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவைச் செயலர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கிய அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பம் மற்றும் பருவமழை போன்றவற்றை எதிர்கொள்வது குறித்து பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், மின்சாரத் தட்டுப்பாடு, நிலக்கரி தேவை, கரோனா அதிகரிப்பு போன்றவைக் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.