High cooking gas cylinder price in one day!

Advertisment

வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயிலிருந்து ஒரேநாளில் 25 ரூபாய் அதிகரித்து 850 ரூபாயாக விலை உயர்வடைந்துள்ளது. சமீபகாலமாகவே பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துவரும் நிலையில், தற்போது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.