/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sabarimalai_8.jpg)
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பலர் எதிர்த்து வந்தனர். இந்த தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு ஐப்பசி பூஜைக்காக பல பெண்கள் வந்தனர். இருந்தாலும் இன்றுவரை சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழையமுடியாமல் உள்ளனர். 10-50 வயது பெண்கள் உள்ளே நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுக்க தொடங்கினார்கள். பல போலிஸுகள் பாதுகாப்பிற்கு இருந்தாலும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தே வருகின்றனர். நேற்று பாதுகாப்பில் சன்னிதானம் வரைக்கும் சென்ற இரண்டு பெண்களும் பக்தர்களின் போராட்டத்திற்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்டனர்.
சபரிமலையில் போராட்டம், பதற்றம், 144 தடை உள்ள நிலையில் நேற்று தனது தந்தையுடன் மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஜனனி சபரிமலைக்கு மாலை அணிந்து, இருமுடிகட்டி சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் தனது கையில் ஒரு பதாகை வைத்திருந்தார். அதில், எனக்கு வயது தற்போது ஒன்பது இனி நான் என்னுடைய ஐம்பதாவது வயதில்தன் சபரிமலைக்குள் வருவேன் என்று எழுதியிருந்தார். இந்த பதாகை பலரின் கவனத்தை ஈர்த்தது. பலரும்அச்சிறுமியைபாராட்டினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)