உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்குஇன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு வேறு நோய்களுக்கான மருந்துகளேகரோனாசிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம்கிராமத்தில்போனிகி ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து கரோனவைகுணப்படுதுவதாகதகவல் பரவியது.
மேலும் ஆந்திரா எம்.எல்.ஏ ஒருவரே தனது தொகுதிக்குள் குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துவதாக விளம்பரப்படுத்தி வருகிறார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், கரோனா கட்டுப்பாடுகளை மீறி மருந்து வாங்க குவிந்தனர். இதனால் கரோனாபரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதனையடுத்துஆந்திரஅரசு, குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துகிறதாஎன்பதுகுறித்து ஆராய, அதனைசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் அனுப்பவும், மருந்தின் மூலக்கூறுகள் குறித்து ஆராய சித்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவையும் அனுப்ப முடிவு செய்தது.
அதேநேரத்தில் இந்த மருந்து குறித்து தகவலறிந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மருந்தின் செயல்திறன் குறித்து ஆராயுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தையும், மத்திய ஆயுஷ் அமைச்சரையும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்துஆந்திரஅரசின் நிபுணர்குழுவுடன்இணைந்து ஆயுர்வேத மருந்தை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்மருத்துவ குழு ஆந்திராவிற்கு விரைந்தது.
இந்தநிலையில்மருந்தின் மூலப்பொருட்கள் கிருஷ்ணம்பட்டியிலிருந்துஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அதிகமான கூட்டம் கூடியதால் மருந்து விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.