சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்றுள்ளஹிமா தாஸின் ஆங்கிலம் பேசும் திறமையை பற்றி ட்விட் செய்த இந்திய தடகள சம்மேளனத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
பின்லாந்தில் நடந்துவரும் 20 வயதோருக்கான சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த பெண் வீரர் ஹிமா தாஸ் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்து வாழ்த்துக்களைகுவித்துவருகிறார்.
நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 51.46 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றுசர்வதேச தடகள போட்டியில் முதல்தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்வீரர்என்ற சிறப்பைஹிமா தாஸ்பெற்றுள்ளார்.
இதற்குமுன் 2002 சீமா புனியாவும் 2014லில் நவஜீத் கவுரும் இந்தியா சார்பில் வெண்கலபதக்கம் பெற்றனர்.
இதனை தொடர்ந்து அவரின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ராம்நாத் சிங், நடிகர் அமிதாப் பச்சன், அக்ஷய்குமார் என பல பிரபலங்கள் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்தியதடகள சம்மேளனம் தனது ட்விட்டர் பதிவில் ''மிகவும் தெளிவாக ஆங்கில திறனுடன் பேசவில்லை, ஆனால் அவரால் முடிந்ததை கொடுத்தார். உன்னால் பெருமையடைகிறோம்'' என கருத்துடன் கூடிய வாழ்த்து செய்தியை ட்விட் செய்தது. ஆனால் அந்த ட்விட்சாதனை படைத்தவரை ஆங்கிலம் பேசதெரியவில்லைஎனும் நோக்கில்கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.