ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஜக எம்பி சாலை மார்கமாக காரில் பயணம் மேற்கொண்டார். இந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தவுடன் வானத்தை வட்டமிட்ட காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.