Advertisment

ஹெலிகாப்டர் விபத்து- 7 பேர் உயிரிழப்பு

Helicopter crash - 7 lose their live

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அண்மையில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உத்தரகாண்ட் பகுதியில் 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி ஏழு பேரும் உயிரிழந்த சம்பவம் அடுத்த பரபரப்பை கொடுத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் கௌரிக்குன்ட் என்ற வனப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் டேராடூனில் இருந்துகுழந்தை உட்பட 7 பேருடன் கேதார்நாத் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் இன்று(15/06/2025)அதிகாலை வனப்பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 7 பேரும் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அடர்ந்த வனப்பகுதியான கௌரிக்குன்ட் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

accident Helicopter crash uttarakhand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe